Published : 15 Feb 2018 08:27 AM
Last Updated : 15 Feb 2018 08:27 AM

உலக மசாலா: மில்லியன் டாலர் மணப்பெண்

120

கிலோ எடையில் செய்யப்பட்ட மிக அழகான கேக் லுல்வா. ‘மில்லியன் டாலர் மணப்பெண்’ என்ற பெயரில், ‘துபாய் மணமகள் 2018’ விழாவில் இந்த கேக் பெண் கலந்துகொண்டார். இந்த கேக்கை உருவாக்கியவர் டெப்பி விங்ஹாம். உலகின் மிகவும் செல்வாக்கான, மதிப்பு மிக்க கலைஞர். இதற்கு முன்பு 16 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷு, 4.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைர ஆடை, 67 மில்லியன் டாலர் மதிப்புள்ள திருமண கேக் போன்றவற்றை தயாரித்து, உலக அளவில் ஆச்சரியப்பட வைத்தவர். இவரது சமீபத்திய படைப்பும் மிகவும் விலை குறைந்த படைப்பும் இந்த மணப்பெண் கேக்தான்! லுல்வா பாரம்பரிய அரேபிய உடையை அணிந்திருக்கிறார். இதில் 25 கிலோ சாக்லெட்டும் 50 கிலோ மிட்டாயும் சேர்க்கப்பட்டிருக்கிறது. “சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் நிஜமான மணப்பெண் போலவே தோற்றமளிக்கும். கற்பனையாக ஒரு விஷயத்தை உருவாக்குவதைவிட, நிஜத்தை என்னுடைய படைப்புகளில் பிரதிபலிப்பதையே விரும்புகிறேன். இந்த மணப்பெண் உடையில் 5 ஆயிரம் பூக்களும் 10 ஆயிரம் சாப்பிடக்கூடிய முத்துகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, 5 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வைரமும் 2 லட்சம் டாலர் மதிப்புடையது” என்கிறார் டெப்பி விங்ஹாம்.

அடேங்கப்பா கேக்!

ப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் ‘தஸ் டைமெய் ஆரம்பப் பள்ளி’ உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. இந்தப் பள்ளியின் சீருடை இத்தாலியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டிசைனரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சீருடையின் விலை சுமார் 45 ஆயிரம் ரூபாய்! ஏற்கெனவே பள்ளிக் கட்டணத்தால் அல்லல்படும் பெற்றோருக்கு இந்த விஷயம் பேரதிர்ச்சியாக இருக்கிறது. விலை அதிகம் உடைய சீருடையை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்கிறார்கள் பெற்றோர்கள். இந்த விஷயம் ஜப்பான் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாயும் சிறுமியருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாயும் சீருடையின் விலையாக இருக்கிறது. புதிய சீருடையுடன் பை, கோட், ஸ்வெட்டர், சாக்ஸ் போன்றவற்றையும் சேர்த்தால் 47 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் எதிர்ப்பை பள்ளிக்கும் கல்வித் துறைக்கும் இமெயிலில் அனுப்பி வருகிறார்கள். ஆனால் பள்ளி நிர்வாகமோ, ‘எங்கள் பள்ளியை தனித்துவமாகக் காட்டுவதற்கே இந்தச் சீருடையைக் கொண்டு வர இருக்கிறோம். ஏப்ரல் முதல் இந்தச் சீருடையில்தான் மாணவர்கள் வரவேண்டும்’ என்கிறது.

எளிமையான சீருடைக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x