அமெரிக்கா: 10 லட்சம் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி

அமெரிக்கா: 10 லட்சம் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி
Updated on
1 min read

10 லட்சம் ஆசிரியர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சி அளிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில், "அமெரிக்காவின் கூட்டாட்சி அரசு  அமெரிக்கா முழுவதும் 10 லட்சம் ஆசிரியர்களுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்க நிதியை வழங்க தயாராகி வருகிறது” என்று கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து தற்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாணவர்கள் உட்பட 17 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவம் நடப்பதைக் கண்டித்து பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் வலுத்து வர, பாதி தானியங்கி துப்பாக்கியை, முழு தானியங்கி துப்பாக்கியாக மாற்ற பயன்படுத்தப்படும் ‘பம்ப் ஸ்டாக்ஸ்’ என்ற உதிரி பாகத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் துப்பாக்கி வழங்க பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in