மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: மியான்மரில் இன்று (சனிக்கிழமை) காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.

மியான்மரில் சனிக்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது வடகிழக்கு இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், காலை 9:25 மணியளவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் வசித்தவர்களுக்கு உணர்ந்திருக்கிறது. 47 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை, உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மேலும், பாகிஸ்தானில் சனிக்கிழமையன்று 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in