சிரியாவில் ஐநா அமைதிப் படை வீரர்கள் 43 பேர் சிறைபிடிப்பு: பிஜி நாட்டை சேர்ந்தவர்கள்

சிரியாவில் ஐநா அமைதிப் படை வீரர்கள் 43 பேர் சிறைபிடிப்பு: பிஜி நாட்டை சேர்ந்தவர்கள்
Updated on
1 min read

சிரியாவில் பணியாற்றிய ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 43 பேரை அல்-காய்தா ஆதரவுப் படை சிறைபிடித்துள்ளது.

சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை தவிர்த்து அல்-காய்தா ஆதரவு படைகளும் அரசுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றன. அங்குள்ள ஐ.நா. அமைதிப் படையில் இந்தியா, பிஜி, பிலிப்பைன்ஸ், அயர்லாந்து, நேபாளம், நெதர் லாந்து நாடுகளைச் சேர்ந்த 1200 வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் குவென்டிரா பகுதியில் தங்கியிருந்த ஐ.நா. அமைதிப் படையின் 43 வீரர்களை அல்-நஸ்ரா முன்னணி என்ற அல்-காய்தா ஆதரவு படை சிறை பிடித்து பிணைக்கைதிகளாக்கி உள்ளது. இவர்கள் அனைவரும் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தவிர பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 81 அமைதிப்படை வீரர்களை கிளர்ச்சிப் படையினர் சுற்றி வளைத்து சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் சரணடைய மறுத்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அமைதிப்படை வீரர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க ஐ.நா. சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கூறியபோது, எந்த அமைப்பு அமைதிப் படை வீரர்களை கடத்தியது என்று தெரியவில்லை. வீரர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவர் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in