

பாகிஸ்தானில் தனியார் நிகழ்ச்சிக்கு வர மறுத்த நடிகை ஒருவரை துப்பாக்கி ஏந்திய மூன்று நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸ் ஒருவர், "பாகிஸ்தானின் மார்டன் நகரத்தைச் சேர்ந்த சும்புல் கான் (25) மேடை நடிகையாக உள்ளார். சும்புல் கானை கடந்த சனிக்கிழமையன்று தனியார் நிகழ்ச்சிக்கு தங்களுடன் வருமாறு துப்பாக்கி ஏந்திய மூன்று நபர்கள் மிரட்டியுள்ளனர். ஷேக் மல்டான் நகரில் உள்ள சும்புல் இல்லத்தையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
எனினும் சும்புல் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இதில் கோபம் கொண்ட அவர்கள் சும்புல் கானை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் பலியானார்" என்றார்.
சுல்புல் கானை கொலை செய்த நபர்கள் அடையாளம் கண்டுவிட்டதாகவும் விரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம் என்றும் பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.