

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து ஐ.நா.வில் இந்தியா சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அப்போது, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என கூறப்பட்டுள்ளது.
காஸாவில் கடந்த ஆகஸ்ட் 5 -ஆம் தேதி முதல் 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன், "இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சேர்ந்து, சர்வதேச சமூகத்தின் குடிமக்களை வஞ்சிக்கிறது. அவர்கள் சொல்லமுடியா துயரங்களால் துயரமுற்று, தற்போது ஆதரவற்று நிற்கின்றனர். பலர் தவறு அறியாது இறந்துவிட்டனர்.
நாம் இதனை தொடர வேண்டுமா? ஆக்கலும் அழித்தலும், பின்னர் அழித்தலும் ஆக்கலும் சாத்தியமில்லை. துயரத்தை தாண்டி நாம் மீண்டும் எழுவோம். ஆனால், இவை மீண்டும் தொடராமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்திர உறுப்பினர் அசோக் முகர்ஜி கூறும்போது, "காஸாவில் அரசியல் ரீதியிலான உன்பாடு காண, அங்குள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் நன்மை ஏற்படுத்தக்கூடிய தீர்வினை காண முயற்சி செய்ய வேண்டும் என்ற ஐ நா பொது செயலாளர் பான் கி மூனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
தற்போது காஸ்வில் ஏற்பட்டுள்ள அமைதிச் சுழல் வரவேற்கத்தக்கது, மூன்று நாள் அமைதி பேச்சுவார்த்தை, பாலஸ்தீனத்துக்கு நன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதேயே நாங்களும் விரும்புகிறோம். பேச்சுவார்த்தை நடத்துவது மூலமே இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. உலகில் எந்த பகுதியிலும் வன்முறைக்கு நடைபெறுவதை இந்தியா ஏற்காது" என்றார்.