உலகின் பெரிய பணக்கார அரசியல்வாதி அதிபர் புதின்

உலகின் பெரிய பணக்கார அரசியல்வாதி அதிபர் புதின்
Updated on
1 min read

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. தான் வசிப்பது 800 சதுர அடி வீடுதான் என்றும் தன்னிடம் 3 கார்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் முன்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன.

விளாதிமிர் புதின் 2012-ம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர் (ரூ.16 லட்சம் கோடி) என்றும் கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதன் மதிப்பு ரூ.11,500 கோடி. இந்த மாளிகையில் உள்ள உணவு மேஜையின் மதிப்பு மட்டும் ரூ.4.15 கோடி. இந்த மாளிகையை பராமரிப்பதற்கு மட்டும் மாதம் 2 மில்லியன் டாலர் (ரூ.16 கோடி) செலவிடப்படுகிறது.

இந்த மாளிகை தவிர்த்து, அவர் வசம் 19 பிரம்மாண்ட வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 6 லட்சம் டாலர் (ரூ.5 கோடி) மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இவற்றில், ‘தி ப்ளெயிங் கெர்மிலின்’ என்ற விமானத்தின் மதிப்பு மட்டும் 716 மில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) ஆகும். அதில் தங்கத்திலான கழிவறை அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in