“இந்தியாவுடன் சுமூக உறவு வேண்டும்” - மாலத்தீவு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

ஃபயாஸ் இஸ்மாயில்
ஃபயாஸ் இஸ்மாயில்
Updated on
1 min read

புதுடெல்லி: மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவரும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஃபயாஸ் இஸ்மாயில் நேற்று கூறியுள்ளதாவது:

இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான இனவெறி பேச்சு என்பது துரதிருஷ்டவசமாக அரசாங்கத்தின் பதவிகளில் உள்ளவர்களின் தனிப்பட்ட கருத்துகள்.சமூக ஊடகங்கள் எங்கும் பரவியுள்ளன. இதுபோன்ற பேச்சுகள் இருநாடுகளுக்கிடையில் எளிதில் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றன.

இந்தியாவுடனான பிரச்சினைகளை தீர்க்கவும், உறவை சுமூகமான முறையில் பேணவும் கடுமையான நிலைப்பாட்டை மாலத்தீவுஅரசு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் எந்தஉள்நோக்கமும் இல்லை என்பதைநிரூபிக்க வேண்டும்.

இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவு பல ஆண்டுகளாக பல்வேறு முதுபெரும் தலைவர்களால் பேணி வளர்க்கப்பட்டது. இந்த உறவை ஒன்றிரண்டு சமூகவலைதள செய்திகள் சீர்குலைக்கும் என்பது வருத்தமளிக்க கூடியது. இருநாட்டு உறவு அரசுகளுக்கு அப்பாற்பட்டது. இருநாடுகளிலும் அரசுகள் மாறும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது என்பது இயல்பான நிகழ்வு.

ஆனால், தற்போது இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையே நிலவி வரும் சலசலப்பு மக்களை சென்றடைந்துள்ளதால் அதனை எப்படி சரி செய்வது என்பதில்தான் எனது முழு அக்கறையும் உள்ளது. இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில் இருதரப்பிலும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு ஃபயஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in