பிரான்ஸ் பிரதமராக கேப்ரியல் நியமனம்

கேப்ரியல் அட்டல்
கேப்ரியல் அட்டல்
Updated on
1 min read

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக 34 வயது கேப்ரியல் அட்டல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான், இரண்டாவது முறையாக பதவி வகிக்கிறார். அவது பதவிக் காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அரசுஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவு, புதிய குடியேற்ற மசோதா ஆகியவற்றுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மக்களின் அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாக அமைச்சரவையை மாற்றி அமைக்க அதிபர் மேக்ரான் முடிவு செய்தார். இதன்படி, பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் (62) நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரான்ஸின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் பெயரை அதிபர் மேக்ரான் நேற்று அறிவித்தார்.

தன்பாலின ஈர்ப்பாளர்: 34 வயதான கேப்ரியல் அட்டல் பிரான்ஸின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிக்கவுள்ள இவர், தன்பாலின ஈர்ப்பாளர் ஆவார். தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் பிரான்ஸ் பிரதமர் ஆவது இதுவே முதல் முறையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in