பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் | சர்ச்சை கருத்து தெரிவித்த 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் பிரதமர் மோடி | கோப்புப்படம்
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மாலத்தீவு துணை அமைச்சர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்துள்ளது அந்நாட்டு அரசு. துணை அமைச்சர்களின் சர்ச்சை கருத்து குறித்து இந்திய அரசு கேள்வி எழுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை பிரதமர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அதை விமர்சிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தை சமூக வலைதள பதிவு மூலமாக தெரிவித்திருந்தனர் மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

இதற்கு இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதே நேரத்தில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அங்கு ஆட்சியில் உள்ள முகமது முய்சு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட சூழலில் சர்ச்சை கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது மாலத்தீவு அரசு.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாலத்தீவு அமைச்சர்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாலத்தீவு அமைச்சர்கள்

முன்னதாக, அமைச்சர்கள் தெரிவித்தது அரசின் கருத்து இல்லை என்றும். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in