Last Updated : 10 Jan, 2018 06:06 PM

 

Published : 10 Jan 2018 06:06 PM
Last Updated : 10 Jan 2018 06:06 PM

இந்திய தொலைக்காட்சி சேனலுக்கு பணியாற்றும் பாக். நிருபர் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பினார்

பிரான்சின் உயர்ந்தபட்ச பத்திரிகையாளர் விருது வென்ற தஹா சித்திகி என்ற இந்திய செய்தி சேனலுக்காகப் பணியாற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பினார்.

பாகிஸ்தானின் அதிகாரத்துவம் மிகுந்த ராணுவத்தை கடுமையாக விமர்சிக்கும் தஹா சித்திகி ராவல்பிண்டியில் விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் கும்பல் ஒன்றால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டார். ஆனால் சிறு சண்டை, காயங்களுடன் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பியுள்ளார்.

இவர் பிரான்சின் உயர்ந்தபட்ச் பத்திரிகை விருதான ஆல்பர்ட் லண்ட்ரெஸ் விருதை 2014-ம் ஆண்டு வென்றவர்.

WION என்ற இந்திய தொலைக்காட்சி செய்தி சேனலின் பாகிஸ்தான் பிரிவு தலைமை நிருபராக பணியாற்றி வருகிறார். இவர் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் மீது கடும் விமர்சனங்களை வைத்ததனால் கண்காணிப்புக்குரியவரானார்.

மனித உரிமைகள் குழுவும் பத்திரிகை சுதந்திரங்களை வலியுறுத்தும் குழுக்களும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் அகமது நூரானி இஸ்லாமாபாத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து காரில் இருந்து அவரை இழுத்துப் போட்ட ஆயுதக்கும்பல் ஒன்று அவரை காட்டுமிராண்டித் தனமாக அடித்து உதைத்தது.

பாகிஸ்தானில் திடீர் திடீரென பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், இளைஞர்கள் காணாமல் போவதுண்டு. ஊடக பணியாளர்களுக்கு மிகவும் அபாயகரமான ஒரு நாடு என்று பாகிஸ்தான் முத்திரை குத்தப்பட்ட நாடாகும். சிலவேளைகளில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதும் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x