

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மாகாணத்தில் 13 குழந்தைகளை அறையில் அடைத்துவைத்த பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்ரிஸ் நகரத்தில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''கலிபோர்னியவைச் சேர்ந்த டேவிர் டேவிட் ஆலன், லூயிஸ் அன்னா தம்பதிகள், மகள் ஒருவர் அவரது இல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தப்பி வந்து எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அதில் அவரது பெற்றோர்கள் 13 சகோதரர்களை ஒரு அறையில் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலைக் கூறினார். அவர் அதிலிருந்து தப்பி வந்ததாகவும், அவரது சகோதர, சகோதிரிகளைக் காப்பாற்றும்படியும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்படட் வீட்டுக்குச் சென்று துர்நாற்றம் நிறைந்த அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 குழந்தைகளை மீட்டோம்" என்றனர்.
டேவிட் ஆலன், லூயிஸ் அன்னா இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தச் சம்பவம் கலிபோர்னியா மாகாண வாசிகளுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனது.