Published : 31 Jan 2018 10:41 AM
Last Updated : 31 Jan 2018 10:41 AM

குடியேற்ற விதிமுறை கெடுபிடி தொடரும்: ட்ரம்ப் திட்டவட்டம்

 

அமெரிக்காவில் குடியேற உரிய தகுதி இருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் எந்த சமரசமும் கிடையாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் விசா கெடுபிடி உட்பட அவரது அரசு பின்பற்றி வரும் பல்வேறு நடவடிக்கைகள் தொடரும் என தெரிகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது :

''அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக மாற்றி அமைப்போம். அமெரிக்காவின் நலனுக்காக உலகின் மிகச் சிறந்த நாடாக அமெரிக்காவை மாற்ற வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அரசின் திட்டங்களுக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். மக்களை கடுமையாக பாதிக்கும் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உள்ளது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே அமெரிக்காவில் குடியேற வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான சமயம் தற்போது வந்துள்ளது. அமெரிக்காவிற்கு பங்களிப்பை அளிக்கக் கூடியவர்கள், நாட்டை நேசிக்கக் கூடிய மக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.

வடகொரியாவில் மிக கொடூரமான ஆட்சி நடக்கிறது. அணுஆயுதங்களை கொண்டு அமெரிக்காவை மிரட்டும் வடகொரியாவின் செயலை கண்டு நாம் பயப்படவில்லை. அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். அவர்களை ஒடுக்க வேண்டும். இதுபோலவே, ஐஎஸ் தீவிரவாதிகள் உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும்'' என ட்ரம்ப் கூறினார்.

அதிபர் ட்ரம்பின் உரையை, ஜனநாயக கட்சியி எம்.பிக்கள் 12 பேர் புறக்கணித்து வெளியேறினர். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாரபட்ச கொள்கைகளை கண்டித்து அவரது உரையை எம்.பிக்கள் புறக்கணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x