Published : 30 Jul 2014 10:43 AM
Last Updated : 30 Jul 2014 10:43 AM

ஏவுகணை ஒப்பந்தத்தை மீறியதாக ரஷ்யா மீது அமெரிக்கா புகார்

தரையிலிருந்து தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல அதிவேக ஏவுகணையை ஏவியதன் மூலம் 1987ல் கையெழுத்திடப்பட்ட ஏவுகணை உடன்படிக்கையை ரஷ்யா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இது மிக ஆபத்தான விவகாரம் என்றும் அது வர்ணித்துள்ளது.

இதுபற்றி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திங்கள் கிழமை கடிதம் எழுதி இருக்கிறார். முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரவுடன் அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரி யும் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

அணு ஆயுத ஏவுகணைகள் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தமக்கு உள்ள சில பொறுப்புகளை ரஷ்ய கூட்டமைப்பு மீறியுள்ளது என்பதே அமெரிக்காவின் முடி வான நிலை என்று ஒபாமா நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்போதைய அதிபர் ரொனால்டு ரீகன்- சோவியத் தலைவர் மிகைல் கார்பசேவ் இடையே 1987ல் அணு ஆயுத ஏவுகணை உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி 500 கிமீ முதல் 5500 கிமீ தொலைவு செல்லும் ஏவுகணைகளை தயாரிப்பதோ, சோதிப்பதோ அல்லது வைத் திருப்பதோ, ஏவுவதோ தடை செய் யப்பட்டுள்ளது. இந்த உடன் படிக்கை ஆயுத உற்பத்தியை குறைக்கவும் அணு ஆயுதங்களை ஒழிக்கவும் உதவியது என பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அதிவேக அணு ஆயுத ஏவுகணையை ஏவி உடன்படிக்கையை மீறியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி ரஷ்யாவுடன் பேசி பிரச்சினையை தீர்க்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. உடன்பாடு நிலைத்து இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலை.

உடன்படிக்கையை ரஷ்யா மீறியுள்ளது பற்றி நாடாளுமன்றம், அமெரிக்காவின் தோழமை நாடுகளுக்கு ஒபாமா நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது .இவ்வாறு அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x