Published : 05 Jan 2018 01:08 PM
Last Updated : 05 Jan 2018 01:08 PM

புத்தாண்டு தீர்மானம் என்ன? - பேஸ்புக் மார்க் ஜூகர்பெர்க் விளக்கம்

பேஸ்புக்கில் ஆபாசம், வன்முறை, தவறான செய்திகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் 2018-ம் ஆண்டில் தனக்கு சவாலாக இருக்கும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் ஆபாசம், வன்முறை, பாலியல் சார்ந்த விஷயங்கள் வெளியிடப்படுவதாகவும், அதனால் பிரச்சினைகள் எழுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற புகார்களை உரிய முறையில் எதிர்கொண்டு தடுப்பதுதான், 2018-ம் ஆண்டில் தனது தீர்மானமாக எடுத்துள்ளதாக மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''பேஸ்புக்கில் தவறுகள் இன்றி, வன்முறை, மோசமான விமர்சனம் உள்ளிட்டவற்றை தடுப்பதுதான், இந்த 2018-ம் ஆண்டில் எனக்குரிய தனிப்பட்ட சவால்களாக உள்ளன. நாங்கள் தற்போது பயன்படுத்தி வரும் கொள்கை மற்றும் பேஸ்புக்கில் உள்ள பயன்பாடுகள், இதுபோன்ற தவறுகளை செய்வதற்கு வாய்ப்பாக உள்ளன. எனவே இதனை தடுப்பதற்கு துறை சார்ந்த நிபுணர்களின் உதவியை நாடியுள்ளேன். தவறுகளை சரி செய்வதை இந்த ஆண்டின் இலக்காக கொண்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

ஆட்சேபனைக்குரிய கருத்துகள் என்றால் என்ன, அவற்றை எப்படி வரையறுப்பது குறித்து பேஸ்புக் பயன்படுத்துவோரே விளக்கம் அளிக்கலாம் என்று மார்க் ஜூகர்பெர்க் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x