அர்ஜென்டினா அதிபராக பதவியேற்றார் ஜேவியர் மிலி: பணவீக்கம், வறுமை, வேலைவாய்ப்பின்மை சவால்களை சமாளிப்பாரா?

அர்ஜென்டினா அதிபராக பதவியேற்றார் ஜேவியர் மிலி: பணவீக்கம், வறுமை, வேலைவாய்ப்பின்மை சவால்களை சமாளிப்பாரா?
Updated on
1 min read

ப்யூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா நாட்டின் அதிபராக பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலி பதவியேற்றார். அர்ஜென்டினா கடுமையான பொருளாதாரா நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில் நடந்த தேர்தலில் ஜேவியர் அபார வெற்றி பெற்றுள்ளார்.

பதவியேற்புக்குப் பின்னர் பேசிய அதிபர் ஜேவியர் மிலி கூறுகையில், "இறைவன் மீதும், என் தேசத்தின் மீதும் ஆணையாக நான் இந்த அதிபர் பதவியில் உண்மையுடன், தேசபக்தியுடன் செயல்படுவேன். முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவை காலிசெய்துவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் நடவடிக்கையால் நாடு அதிதீவிர பணவீக்கத்தை சந்தித்துள்ளது. அரசாங்கத்திடம் பணம் இல்லை. நிதி சீர்திருத்தம் தான் இப்போதைய தேவை. ஆனால் அதன் பலன்கள் அரசாங்கத்துக்கு வர வேண்டும். தனியார் துறைகள் ஆதாயமடையும் வகையில் இருக்கும்படியான சீர்திருத்தங்களாக இருந்துவிடக் கூடாது" என்றார்.

அர்ஜென்டினாவின் பணவீக்கம் மூன்று இலக்கத்தில் உள்ளது. அங்கு தற்போது 40 சதவீத மக்கள் வறுமையில் உள்ளனர். 1.8 கோடி பேர் தங்களின் தனிப்பட்ட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளனர். 10 சதவீத மக்கள் உணவுக்குக்கூட வழியிலாது மோசமான வறுமையில் உள்ளனர். நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.2 சதவீதமாக உள்ளது. கடுமையான பணவீக்கம், நாணய மதிப்பு சரிவு என அர்ஜென்டினா கடுமையான நிதிச் சுழலில் சிக்கியுள்ள சூழலில் ஜேவியரின் பதவியேற்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேவியருக்கும் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in