

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகினர். 140 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், ''ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (சனிக்கிழமை) மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 40 பேர் பலியாகினர். சுமார் 140 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.