Last Updated : 22 Jan, 2018 02:45 PM

 

Published : 22 Jan 2018 02:45 PM
Last Updated : 22 Jan 2018 02:45 PM

காபூல் தீவிரவாதத் தாக்குதல் 18 பேர் பலி: ஐ. நா., அமெரிக்கா கண்டனம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுள்ள ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பலியானவர்களில் 14 பேர் வெளிநாட்டினர்.

காபுல் நகரரிலுள்ள புகழ்பெற்ற இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தானியங்கி துப்பாக்கிகள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் அங்குள்ள சுற்றுலா பயணிகளை பயண கைதிகளாக பிடித்து மிரட்டல் விடுத்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த ராணுவத்தினர் தீவிரவாதிகளுடம் சண்டையிட்டு ஹோட்டலை மீட்டனர். ஹோட்டலில் இருந்த 41 வெளி நாட்டினர் உள்ளிட்ட 150 பயணிகள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.

இந்த தீவிரவாதத் தாக்குதலில் 18 பேர் பலியாகினர். இதில் 14 பேர் வெளிநாட்டினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஐ. நா , அமெரிக்கா .கண்டனம்

காபூலில் நடத்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐ. நா.சபை, அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஐ. நா. பொதுசெயலர் அந்தோனியோ குத்தேரஸின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு  எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள். ஆப்கன், மக்களும் இணைந்து இந்தத் தாக்குதலுக்கு எதிரக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள்'' என்றார்.

இது குறித்து அமெரிக்கா, ''காபூலில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எங்களது வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். சிறப்பாக செயல்பட்ட ஆப்கான் பாதுகாப்புப் படைக்கு வாழ்த்துகள். இந்தத் தாக்குதல் தொடர்பான ஆப்கான் அரசின் விசாரணைக்கு நாங்கள் துணையாக இருப்போம்'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x