Last Updated : 25 Jan, 2018 03:36 PM

 

Published : 25 Jan 2018 03:36 PM
Last Updated : 25 Jan 2018 03:36 PM

பாகிஸ்தான் பொய் சொல்கிறது: ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து அமெரிக்கா கண்டனம்

புதனன்று பாகிஸ்தான் பகுதிக்குள் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கான் அகதிகள் முகாமைத் தாக்கியது என்று பாகிஸ்தான் கூறுவது முழு பொய் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் அகதிகள் முகாமைக் குறிவைத்தே தாக்குதல் என்று கூறிய பாகிஸ்தான் பலி எண்ணிக்கை பற்றி எதுவும் கூறவில்லை.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில் அமெரிக்க தாக்குதல் ஆப்கான் அகதிகள் முகாமை குறிவைத்தது என்று கோருகிறது, இது முற்றிலும் தவறு” என்று தெரிவித்துள்ளார்.

ஐநா அகதிகள் முகமையை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டபோது பழங்குடியினர் பகுதியில் அகதிகள் முகாம்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகளிடம் விசாரித்த போதும் அங்கு அகதிகள் முகாம் இல்லை என்றே தெரிவித்துள்ளனர்

ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளோ ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்த இடத்தில் 2 அகதிகள் முகாம்கள் இருப்பதாகக் கூறுகிறது.

பாகிஸ்தானில் 1.4 மில்லியன் ஆக்பான் அகதிகள் உள்ளனர். ஆனால் அதிகாரபூர்வமற்ற கணக்குகளின் படி சுமார் இன்னும் 7 லட்சம் பேர் கூடுதலாக அங்கிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த 2 பில். டாலர்கள் உதவியை நிறுத்தியதையடுத்து அகதிகள் ஆப்கானுக்குத் திரும்ப ஜனவரி 31-ம் தேதி இறுதிக்கெடு விதித்திருந்தது பாகிஸ்தான். ஆனால் இத்தகைய இறுதிக்கெடுக்கள் கடந்த காலத்தில் நீட்டிக்கப்பட்டதே நடந்துள்ளது.

உதவியை நிறுத்திய பிறகே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x