

கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போர்க் குற்றத்துக்கு சமமானது என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவி பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மலேசிய பயணிகள் விமானம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து முழுமையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் சர்வ தேச விதிகள் மீறப்பட்டுள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போர்க் குற்றத்துக்கு இணையானது. சம்பவத் துக்கு காரணமா னவர்கள் யாராக இருந் தாலும் அவர்கள் நீதியின் முன்பு நிறுத் தப்பட வேண்டும்.
டோன்ஸ்க், லூகான்ஸ்க் பகுதிகளில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இருதரப்பிலும் அப்பாவி பொது மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர். இதுவரை 1129 பேர் உயிரிழந் துள்ளனர். 3442 பேர் பலத்த காய மடைந்துள்ளனர். உள் நாட்டுப் போர் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி கிழக்கு உக்ரைன் பகுதியில் பறந்த மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர். அந்த விமானத்தை கிளர்ச்சி யாளர்கள்தான் சுட்டு வீழ்த்தினர் என்று உக்ரைன் அரசும் ஐரோப்பிய நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன. இதனை கிளர்ச்சிப் படை மறுத்து வருகிறது.