ஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை

ஃபேஸ்புக்கில் 10 கோடி ரசிகர்களை வசப்படுத்தி ஷகிரா சாதனை
Updated on
1 min read

பிரபல பாப் இசைப் பாடகி ஷகிரா ஃபேஸ்புக்கில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவரது >அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் 10 கோடி ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பிரபலம் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கம் இவ்வளவு லைக் பெறுவது இதுவே முதன்முறை.

இது குறித்து பத்திரிக்கைகளிடம் பேசிய ஷகிரா, "இந்த மைல் கல்லை எட்டியதை நான் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். சமூக ஊடகங்கள், குறிப்பாக, ஃபேஸ்புக், என்னைப் போன்ற பல கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் நடுவே இருந்த இடைவெளியைக் நிரப்பியுள்ளது" என்றார்.

இதோடு, இதுவரை ஃபேஸ்புக்கில் தனது மறக்க முடியாத தருணங்களைப் பற்றிய வீடியோ ஒன்றையும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷகிரா பதிவேற்றியுள்ளார்.

இந்த சாதனையையொட்டி, ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், ஷகிராவின் பக்கத்தில் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவைச் சேர்ந்த பாடகியான ஷகிரா, பல பாப் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். முக்கியமாக, சென்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக இவர் பாடிய 'வாகா வாகா' பாடல் உலக அளவில் மிகப் பிரபலமானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in