‘லிட்டில் இந்தியா’ கலவரம்: இந்தியருக்கு 30 மாதம் சிறை
சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதி யில் கடந்த டிசம்பர் மாதம் நடை பெற்ற கலவரம் தொடர்பாக மேலும் ஓர் இந்தியருக்கு 30 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ந்தேதி நடந்த ஒரு பேருந்து விபத் தில் தமிழர் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. இதில், 54 போலீஸார், ராணுவ அதி காரிகள் உள்பட ஏராளமானவர்கள் காயமடைந்தனர். 23 அவசரகால வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக இந்தியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 13 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாரங்கன் குமரன்(36) என்பவருக்கும் 30 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப் பளிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 இந்தியர்கள் மீதான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
