

எம்.எச்.370 மாயமாகி அதன் மர்மமே விடுபடாத நிலையில் எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தினால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் என்றாலே மக்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக கோலாலம்பூரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழனன்று ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த எம்.எச்.17 விமானம் உக்ரைன் அருகே டாண்ட்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாயினர். இதில் 36 ஆஸ்திரேலியா பயணிகளும் அடங்குவர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மலேசிய ஏர்லைன்ஸில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், “இப்போது மலேசிய ஏர்லைன்ஸ் என்றாலே மக்களுக்கும், ஊழியர்களுக்கும் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
“சீருடை அணிந்து வேலை செய்யும்போது அனைத்தும் சரி, ஒன்றும் நடக்கவில்லை என்று நாங்கள் வெளியில் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் உண்மையில் பயந்துதான் போயிருக்கிறோம். நண்பர்களை இழக்கிறோம், பல கொடூரங்களை கண்ணெதிரே பார்த்து மனது புண்பட்டிருக்கிறது” என்றார்.