தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி ஐரோப்பிய விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி ஐரோப்பிய விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
Updated on
1 min read

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

அமெரிக்காவை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்த அல்-காய்தா அமைப்பு திட்ட மிட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சிரியா, ஏமன் நாடுகளைச் சேர்ந்த அல்-காய்தா ஆதரவு தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் விமானங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் வியூகம் வகுத்து வருவதாக உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரிட்டன் விமான நிலையங்களில் கடந்த சில நாள்களாக உச்சக் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் விமான நிலையங்களிலும் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக பயணிகள் முன் கூட்டியே விமான நிலையங் களுக்கு வர வேண்டும் என்றும், அனைத்து பாதுகாப்பு நடைமுறை களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அந்த நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

இவை தவிர மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அமெரிக்கா அறி வுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவைகளை இயக்கும் அனைத்து நாடுகளும் பாது காப்பை அதிகரிக்குமாறு அமெரிக்கா பகிரங்கமாக வேண்டு கோள் விடுத்துள்ளது.

மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட சோதனைகளில் சிக்காத வகையில் புதிய ரக வெடிகுண்டுகளை தயாரித்து தாக்குதல் நடத்த அல்-காய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in