Last Updated : 04 Jan, 2018 02:58 PM

 

Published : 04 Jan 2018 02:58 PM
Last Updated : 04 Jan 2018 02:58 PM

டி.என்.ஏ.வை காலி செய்யும் மதுப்பழக்கம்; புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது: ஆய்வில் எச்சரிக்கை

ஸ்டெம்செல்களில் டி.என்.ஏ.வை ஆல்கஹால் நிரந்தரமாக சேதம் செய்து விடுகிறது. இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

முன்பு செல் வளர்ப்புகள் மூலம் ஆல்கஹால் எவ்வாறு புற்றுநோயை உருவாக்குகிறது என்பதை துல்லியமாக முந்தைய ஆய்வுகள் கண்டன.

இந்த புதிய ஆய்வில், எலிப்பரிசோதனை மூலம் ஆல்கஹால் எவ்வாறு நிரந்தர மரபணுச் சேதத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவின் எம்.ஆர்.சி சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகள் நீர்க்கச் செய்த ஆல்கஹாலை எலிக்கு கொடுத்தனர், அதாவது இது எத்தனால் என்ற ரசாயனப் பெயரில் அழைக்கப்படுகிறது

இதனையடுத்து குரோமோசோம் பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ மூலக்கூறில் மரபணுவின் வரிசை முறையைக் ஆராய்ந்து ஆல்கஹாலை உடல் உறுப்புகள் செயலியக்கத்துக்கு உட்படுத்தும் போது அசிடால்டிஹைட் (acetaldehyde) என்ற நச்சு ரசாயனம் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டது.

ரத்த ஸ்டெம் செல்களினுள் அசிடால்டிஹைட் ரசாயனம் டி.என்.ஏ.யை கடுமையாகச் சேதம் செய்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கேத்தன் படேல் கூறும்போது, “சிலவகைப் புற்று நோய்கள் ஸ்டெம்செல்களில் டி.என்.ஏ. சேதமடைவதால் வருவதே. சில சேதங்கள் எதேச்சையாக நிகழ்பவை, எங்கள் கண்டுபிடிப்புகளின் படி ஆல்கஹால் மதுபானம் அருந்துவது இவ்வகைச் சேத ஆபத்தை அதிகரிக்கிறது” என்றார்.

ஆரோக்கியமான ஸ்டெம்செல்கள் மோசமடையும் போது கேன்சர் உருவாகிறது. மார்பகம், குடல் புற்றுநோய்கள் போன்ற பொதுப்படையான கேன்சர் நோய்களுடன் ஆல்கஹால் நுகர்வினால் ஏற்படும் 7 புற்று நோய் வகைகளை ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தி எச்சரிக்கின்றனர்.

ஆல்கஹாலுக்கு அப்படியொன்றும் நம் உடல் பாதுகாப்பில்லாமல் இல்லை. முதல் கட்ட தடுப்பு அல்டியைட் டிஹைட்ரோஜெனேஸ்கள் என்/ற சுரப்பிகள் முதற்படி ஆல்கஹால் விளைவுகளைத் தடுக்கிறது. இந்த சுரப்பிகள் ஆல்கஹாலில் உள்ள தீங்கு விளைவிக்கும் அசிடல்டிஹைட் என்ற ரசாயனத்தை உடைத்து அசிடேட் ஆக மாற்றுகிறது. இதனை நம் செல்கள் ஆற்றலுக்கான ஆதாரமாக பயன்படுத்த முடியும்.

உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள், குறிப்பாக தென்கிழக்காசியாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சுரப்பிகள் ஒன்று இல்லை அல்லது இதன் தவறான ஒரு வடிவம் உள்ளுக்குள் இருக்கிறது.

மதுபோதை ஏற்படுத்தும் ஹேங் ஓவருக்கும் இந்த அசிட்டால்டிஹைட் என்ற ரசாயனம்தான் காரணம்.இந்த சுரப்பிகள் இல்லாத எலிகளுக்கு நீர்க்கச் செய்த ஆல்கஹாலை அளித்த போது அதன் டி.என்.ஏ. அதிக அளவில் பாதிப்படைவது தெரிந்தது, ஆனால் ஆரோக்கிய சுரப்பிகள் உள்ள எலிகளிடத்தில் இந்த ஆல்கஹாலால் ஏற்படும் சேதம் குறைவு.

டி.என்.ஏ. சேதமடையாமல் தடுக்கும் செல்களின் இரண்டாவது தடுப்பமைப்பு பலவகையான டிஎன்ஏ பழுது சரிசெய்யும் அமைப்புகளாகும், இது தானாகவே சேதத்தை தடுக்கும் தன்மை கொண்டது.

இருப்பினும் சிலருக்கு இத்தகைய பழுதபார்க்கும் அமைப்பு வேலை செய்யாது சிலருக்கு மரபணு மாற்றங்கள் ஏற்படும் இதனால் பழுதுபார்க்கும் செயலை செல்கள் செய்ய முடியாமல் போவதுண்டு.

“எனவே ஆல்கஹாலை சரியாக செயலியக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும்போது ஆல்கஹால் தொடர்பான டிஎன்ஏ சேதத்தினால் சிலவகையான புற்றுநோய்கள் ஏற்படும். ஆனாலும் ஒன்றை நாம் நினைவில் கொள்வது நலம், ஆல்கஹாலை திறம்பட அகற்றுவது அல்லது டிஎன்ஏ பழுதுபார்க்கும் அமைப்புகள் சரியாக வேலை செய்வது ஆகியவை நிகழ்ந்தாலும் அவை துல்லியம் அற்றதாக இருக்கும், இதனால் புற்றுநோய் சிலபல வகைகளில் ஏற்படும். அதாவது தடுப்பு அமைப்புகள் ஒருவருக்கு மிகச்சரியாக வேலை செய்தாலும் ஆல்கஹால் தொடர்பான புற்றுநோய்களை சில வேளைகளில் தடுக்க முடியாமல் கூட போய்விடும்” என்று இந்திய வம்சாவளி ஆய்வாளர் படேல் எச்சரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x