Published : 30 Oct 2023 07:03 AM
Last Updated : 30 Oct 2023 07:03 AM
புதுடெல்லி: சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த கிளீனர் சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த அந்தப் பெண் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு மே 4-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. போலீஸார் தீவிர விசாரணை மே 5-ம் தேதியே சின்னையாவை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசு சார்பில் அரசு துணை வழக்கறிஞர் (டிபிபி) கயல் பிள்ளை ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்ட சின்னையாவுக்கு 15 முதல் 17 ஆண்டு சிறைத் தண்டனையும், 18 சவுக்கடி தண்டனையும் தரப்படவேண்டும் என அவர் வாதாடினார்.
விசாரணையின் முடிவில் சின்னையாவுக்கு 16 ஆண்டு சிறை, 12 சவுக்கடி தண்டனையை வழங்கி நீதிபதி அண்மையில் தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT