

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வடகொரியா முடிவு செய்துள்ளது. குறிப்பாக தொடக்கவிழாவின்போது ஓரே கொடியின் கீழ் இணைந்து அணிவகுப்பு நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால் போர் பதற்றம் தணிந்துள்ளது.
இந்நிலையில், தொடக்க விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 8-ம் தேதி வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு தினம் வருகிறது. இதையொட்டி பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் அதற் கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியாவில் அதன் நிறுவனர் கிம் 2-சங் கொரில்லா படையை உருவாக்கியதன் நினைவாக ஏப்ரல் 25-ம் தேதி இதுபோன்ற ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வந்தது. இதுவரை பிப்ரவரி 8-ம் தேதிக்கு முன்னுரிமை வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு அந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப் பாக ஒலிம்பிக் தொடங்க உள்ள நாளுக்கு முந்தைய நாளில் இதுபோன்ற அணுவகுப்புக்கு ஏற்பாடு செய்திருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.