Last Updated : 04 Jan, 2018 12:22 PM

 

Published : 04 Jan 2018 12:22 PM
Last Updated : 04 Jan 2018 12:22 PM

முதல் "ப்ளூ மூன்”: ஜனவரி 31-ம் தேதி 150 ஆண்டுகளின் அரிதான முழு சந்திர கிரகணம்

மாதத்தின் 2-வது பவுர்ணமி தினத்தன்று 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழுமுற்று சந்திர கிரகணம் இம்மாதம் 31-ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘நீல நிலா’ (ப்ளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது.

2018-ன் முதல் சந்திரகிரகணம் இது. இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது.

ஜனவரி 31- ம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழு நிறைவாகத் தெரியும்.

அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா, ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.

மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என ஸ்பேஸ் டாட்.காம் தெரிவிக்கிறது.

முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும்.

இந்த முழு சந்திர கிரகணத்தை விட்டால் அடுத்த முழு சந்திரகிரகணம் டிசம்பர் 31, 2028-ல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037-ல் நிகழும், இந்த இரண்டுமே முழுமுற்றான சந்திர கிரகணங்கள்.

2017-க்கு முன்னதாக, டிசம்பர் 31, 2009-; 8% பகுதி கிரகணம், ஆனால் புளூ மூன் முழு சந்திர கிரகணம் கடைசியாக நிகழ்ந்தது மார்ச் 31, 1866ம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x