Published : 03 Jul 2014 09:00 AM
Last Updated : 03 Jul 2014 09:00 AM

பணத்தை திருப்பித் தருகிறேன்: கட்டுமான நிறுவன அதிபர் அறிவிப்பு

இடிந்து விழுந்த 11 மாடி கட்டி டத்தை கட்டிய மதுரையை சேர்ந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத் தின் உரிமையாளர் மனோகரன், அவரிடம் வீடு வாங்கியவர் களுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.

அதில், “நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன்” என்று கூறியிருக் கிறார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அவர் விடுதலையாகி வந்த பிறகு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக் கையை எடுப்பார் என்று வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டேங்க் உடைந்ததால் விபத்தா?

“அடித்தளம் சரியாக போடாததால் தான் மழை பெய்ததும் கட்டிடம் இடிந்துவிட்டது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், 11 மாடி கட்டிடத்தின் மேலே கட்டப்பட் டிருந்த பிரம்மாண்ட தண்ணீர் தொட்டியில் மின்னல் தாக்கிய தில் தண்ணீர் தொட்டி உடைந்து கட்டிடத்தின் மேலே விழுந்ததால் தான் மொத்த கட்டிடமும் இடிந்து விட்டது. மற்றபடி கட்டிட வடி வமைப்பில் எந்த தவறும் இல்லை” என்று கட்டுமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்டிட வடிவமைப் பாளர் விஜய் பர்காத்ரா முறை யான அங்கீகாரம் பெற்றவர் அல்ல என்றும், 11 மாடிகள் கட்டுவதற்கு அவருக்கு போதிய பயிற்சி இல்லை என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆந்திர தொழிலாளர்கள் 14 பேரை காணவில்லை

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இருந்து 39 பேர் மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட பணிக்கு வந்தனர். இவர்களில் 15 பேர் கட்டிட விபத்தில் இறந்துள்ளனர். 10 பேர் காயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 பேரை காணவில்லை.

கைதான 6 பேரிடம் விசாரணை

பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து, இன்ஜினீயர்கள் துரைசிங்கம், விஜய், சங்கரராமகிருஷ்ணன், வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்தது தொடர்பாக இவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x