Published : 29 Sep 2023 12:42 PM
Last Updated : 29 Sep 2023 12:42 PM

கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது: வங்கதேச வெளியுறவு அமைச்சர் சாடல்

டாக்கா: கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது: கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலையுண்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது, கொலையாளிகளால் கனடாவில் தஞ்சமடைந்து, அங்கே அவர்களால் அற்புதமான வாழ்க்கையை வாழமுடிகிறது. கனடாவின் இந்த நிலைப்பாடு, மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அதன் நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது.

மனித உரிமைகள் பற்றிய கருத்து பலரால் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. ஏனென்றால் கொலையாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை பாதுகாக்க மனித உரிமைகள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம், கனடாவுடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். கனடா குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கக் கூடாது. நாங்கள் சிலரை உடனடியாக நாடு கடத்துமாறு கனடா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்போது அவர்கள் அந்தப் பிரச்சினை குறித்து எங்களிடம் பேசுவதில்லை” இவ்வாறு ஏ.கே.அப்துல் மொமென் தெரிவித்துள்ளார்.

கனடா - இந்தியா மோதல் பின்னணி: கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x