உலகின் 2-வது பெரிய கோயில் அக்டோபரில் திறப்பு

அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் அக்டோபர் 8-ல் திறக்கப்பட உள்ள நவீன யுகத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சுவாமிநாராயண் அக் ஷர்தாம் கோயில்.படம்: பிடிஐ
அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் அக்டோபர் 8-ல் திறக்கப்பட உள்ள நவீன யுகத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சுவாமிநாராயண் அக் ஷர்தாம் கோயில்.படம்: பிடிஐ
Updated on
1 min read

ராபின்ஸ்வில்லே (நியூ ஜெர்சி): அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ராபின்வில்லி டவுன்ஷிப்பில் பாப்ஸ் சுவாமி நாராயண் அக் ஷர்தாம் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2011 முதல் 2023 வரையிலான 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து 12,500 தன்னார்வலர்கள் இந்த கோயிலை கட்டி உள்ளனர்.

183 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் உலகின் மிகப்பெரிய 2-வது இந்து கோயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டிற்கு அடுத்த படியாக நியூ ஜெர்சியில் உள்ள இந்த கோயில் இரண்டாது பெரிய கோயிலாக கருதப்படும்.

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர்வாட் கோயில் வளாகம், உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலாகும். இது, 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இதனை அங்கீகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in