Last Updated : 31 Dec, 2017 09:25 AM

 

Published : 31 Dec 2017 09:25 AM
Last Updated : 31 Dec 2017 09:25 AM

லைபீரியா புதிய அதிபராக கால்பந்து வீரர் ஜார்ஜ் தேர்வு

லைபீரியா நாட்டின் அதிபர் தேர்தலில் முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேஹ் வெற்றி பெற்றுள்ளார். வரும் 22-ம் தேதி அவர் அதிபராக பதவியேற்கிறார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு லைபீரியா. அந்த நாட்டில் 1989-1996 மற்றும் 1999-2003 ஆண்டுகளில் இரண்டு முறை உள்நாட்டுப் போர்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஐக்கிய கட்சியின் மூத்த தலைவர் எல்லன் ஜான்சன் சர்லீப் அதிபராக பதவி வகிக்கிறார்.

இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் கடந்த அக்டோபர் 10, டிசம்பர் 26 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஐக்கிய கட்சி சார்பில் துணை அதிபர் ஜோசப் பொக்காய், ஜனநாயக மாற்றத்துக்கான காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ஜார்ஜ் வேஹ் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் ஜார்ஜ் வேஹ் வெற்றி பெற்றார். வரும் 22-ம் தேதி லைபீரியாவின் புதிய அதிபராக அவர் பதவியேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x