

லிட்டில் இந்தியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர் பழனிவேல் தாஸ் மோகனுக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர், இந்த வழக்கில் தண்டனை பெறும் 13-வது இந்தியர் ஆவார்.சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரும் கலவரம் வெடித்தது.
இக்கலவரத்தில் 400 பேர் ஈடுபட்டதாகவும், 23 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 54 போலீஸார் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்தபோது 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பஸ்ஸை சேதப்படுத்தியது. அந்த கும்பலுடன் சேர்ந்து பழனிவேல் தாஸ் மோகனும் சென்றுள்ளார். பாட்டிலை எடுத்து தெருவில் வீசினார் என்று போலீஸார் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது