

சீனாவில் நாய்க்குட்டி ஒன்று சிகரெட் புகைப்பதற்கு அடிமையாகிவிட்டது. மியா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்க்குட்டி இப்போது தினமும் இரவு சிகரெட் பிடித்த பிறகுதான் தூங்குகிறது. சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் இந்த நாய்க்குட்டி உள்ளது. அதன் உரிமையாளர் முதலில் விளையாட்டாக நாய்க்குட்டிக்கு சிகரெட் புகைக்க கற்றுக் கொடுத்தார். ஆனால் இப்போது இது சிகரெட்டை தனது அன்றாட பழக்கமாக்கி விட்டது. சுமார் ஓராண்டாக அதற்கு புகைப் பழக்கம் உள்ளது.
அதிலும் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் சிகரெட் மட்டும்தான் அது விரும்புகிறது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நாயை சிகரெட் குடிக்க பழக்கியதற்காக அதன் உரிமையாளருக்கு சீனாவில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தனது செல்ல நாய் விரைவில் இந்த கெட்ட பழக்கத்தை விட்டு விடும் என்று அதன் உரிமையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.