

நிதித்துறை சீர்திருத்த நடவடிக்கை களில் தாராளம் காட்டிவரும் சீனா முதல்முறையாக 3 தனியார் வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்றுமதிக்கு முதுகெலும்பாக உள்ள சிறுதொழில் நிறுவனங் களுக்கு அதிக அளவில் நிதி கிடைக்க ஏதுவாக இணைய நிறுவனமான டென்டென்டம் என்ற நிறுவனத்தின் விபேங்க் உள்ளிட்ட 3 தனியார் வங்கிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த தகவலை சீன வங்கித்துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் ஷாங் புலின் தெரிவித்தார்.
வுபேங்க் தனியார் வங்கி தனி நபர்களுக்கும் சிறு, குறு வர்த்தக நிறுவனங்களுக்கும் சேவை வழங்கும். ஷென்ஷன் நகரில் இது அமைந்துள்ளது என அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.
சீனா அனுமதி வழங்கிய மற்ற இரு வங்கிகள் வெங்ஷூ, தியான் ஜின் ஆகிய இடங்களில் செயல்படும். ஹுவாபே குழு மற்றும் மைகோ குழு ஆகியவை இணைந்து தியான் ஜினில் அமைக்கும் வங்கி தொழில் நிறுவனங்களுக்கான வங்கிச் சேவைகளை செய்யும் என ஷாங் தெரிவித்தார்.
வெங்ஷூ நகரில் அமையும் வங்கி, சிண்ட் குழு மற்றும் ஹுவாபான் குழு ஆகியவற்றை இணை நிறுவனர்கள் கொண்டு இயங்கும். இதன் சேவை இலக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தனிநபர் நடத்தும் வர்த்தக மையங் கள், ஊரகப்பகுதி களாகும்.
சீன அரசு அனுமதித்துள்ள தனியார் வங்கிகளில் சில உலக அளவில் சிறப்பாக செயல்படுபவை பட்டியலில் இடம் பெற்றுள்ளவை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீத அளவில் நிலைப்பெற்று தொய்வில் இருப்பதால் அதை மாற்றி உத்வேகம் கொடுப்பதற்காக புதிய சீர்திருத்த நடவடிக்கையை சீன அரசு எடுத்துள்ளது.
அரசு வங்கிகள் மிகப்பெரிய திட்டங்களுக்கும் மாகாண அரசுகளுக்குமே நிதி உதவி செய்கின்றன. சிறு தொழில் துறைக்கு கடன் கொடுப்பதில்லை என்று புகார் சொல்லப்படுகிறது