ரஷ்யா-உக்ரைன் போரின் மிகப்பெரிய தாக்குதலை தடுத்து நிறுத்தியது நான்தான்: எலான் மஸ்க்

ரஷ்யா-உக்ரைன் போரின் மிகப்பெரிய தாக்குதலை தடுத்து நிறுத்தியது நான்தான்: எலான் மஸ்க்
Updated on
1 min read

ரஷ்ய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்.

ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா -உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு மாஸ்கோ அருகில் உள்ள கருங்கடல் பகுதியில் இணைய வசதியை செயல்படுத்த உக்ரைன் சார்பில் தனக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதன் விளைவை கருத்தில் கொண்டு இணைய வசதியை நான் செயல்படுத்தவில்லை.

அப்போது, ஸ்டார்லிங்க் சேவையை செயல்படுத்த உக்ரைன் அரசிடம் இருந்து அவசர கோரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் கடற்படை தளத்தை முழுமையாக மூழ்க செய்வது தான் இதற்கு முக்கிய காரணம். இதற்கு ஒத்துழைக்கும் வகையில் உக்ரைனின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டு இருந்தால், போரில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட ஸ்பேஸ்-எக்ஸ் முக்கிய காரணமாக மாறி இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in