

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் ஆட்சி சர்வாதிகாரமாக மாறிவருகிறது என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் விமர்சனம் செய்ததையடுத்து அவரை மர்ம நபர்கள் பின்தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு அரசு சாரா சமூக அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் கூட்டங்களைக் கூட்டக்கூடாது என்று ராஜபக்சே அரசு தடை விதித்ததையடுத்து மூத்த வழக்கறிஞர் உபுல் ஜெயசூரியா சர்வாதிகராத்தை நோக்கி ராஜபக்சே ஆட்சி சென்று கொண்டிருக்கிறது என்று விமர்சனம் வைத்தார்.
இவ்வாறு விமர்சனம் வைத்த நாள் முதல் அவரைப் பின்தொடர்ந்து கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் மர்ம நபர்கள் சிலர் வந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர் என்பதால் அவர் போலீஸ் உதவியை நாடியுள்ளார்.
"என்னை அவர்கள் கொலை செய்ய முயற்சி செய்வதாகவே எனக்குப் படுகிறது, நான் போலீஸை அழைத்த பின்பே அவர்கள் என்னைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளனர்.
போருக்குப் பின்னரே விடுதலைப்புலிகள் ஏற்படுத்திய அச்சத்திலிருந்து விடுபட முடியாத அதிபர் மகிந்த ராஜபக்சே, குடிமைச் சமூகத்தின் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் தனிநபர்கள், விமர்சகர்கள் என்று அனைவர் மீதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக இலங்கை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
போருக்குப் பின் ராஜபக்சேவின் அரசு ஒரு விதமான ரகசிய-ராணுவ அதிகாரமாகவும், அடக்குமுறை அரசாகவும் மாறி வருகிறது என்று இலங்கையில் மனித உரிமை அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றன.