குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் முட்டை: ஆய்வில் தகவல்

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் முட்டை: ஆய்வில் தகவல்
Updated on
1 min read

குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது அவர்களது மூளை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் நடத்திய ஆய்வில், ''மனிதர்கள் வரலாறு முழுவதும் எடுத்துக் கொண்டால் முட்டை அவர்களின் உணவில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. ஆனால் அவற்றில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகள் இன்னும் அதிகளவில் மக்களிடம் சேராமல் உள்ளன.

பால், பயறுகளைப் போல முட்டையும் நமது ஆரம்ப காலத்தில் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியுள்ளது. 6 மாதம் முதல் 9  மாதம் உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் முட்டைகள் குழந்தைகளின் ஆரம்ப காலத்தில் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.

முட்டைகளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் பி 12 மற்றும் இதர ஊட்டச்சத்துகளும் இடம்பெற்றுள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in