

நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பட்ஜெட்டை அமெரிக்க செனட்டின் மூத்த உறுப்பினர் மார்க் வார்னர் பாராட்டியுள்ளார்.
இந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க செனட் குழுவின் துணைத் தலைவராகவும் மார்க் வார்னர் உள்ளார். மோடியின் பட்ஜெட் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு சீர்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு எளிதாக வருவதற்குத் தடையாக இருந்த பல முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதாரத்துக்கு அந்நிய முதலீடு அவசியம் என்பதை புரிந்து செயல்பட்டு வரும் மோடியை பாராட்டுகிறேன். இந்த பட்ஜெட் மூலம் இந்தியாவில் வளர்ச்சியை நோக்கிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். இந்திய அரசுடன் நெருங்கி பணியாற்றியுள்ளேன். அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று நான் கூறிவந்திருக்கிறேன். இப்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.