

உக்ரைனில் எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியானதைத் தொடர்ந்து இனி எம்.எச்.19 என்ற பெயரில்தான் ஆம்ஸ்டர்டாம்-கோலாலம்பூர் விமானச் சேவை தொடரும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம்.எச்.17 என்ற அடையாளத்தை விலக்கிக் கொள்வதாகவும் இனி அந்த விமானச்சேவை எம்.எச்.19 என்றே அழைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது மலேசிய ஏர்லைன்ஸ்.
சேவை எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறிய மலேசிய ஏர்லைன்ஸ், ஆம்ஸ்டர்டாம்-கோலாலம்பூர் தினசரிச் சேவை தொடரும் என்று கூறியுள்ளது.
முன்னதாக, இன்று வரை புரியாத புதிராக மாயமாகிப்போன எம்.எச்.370 விமானத்தின் அடையாளத்தையும் மலேசிய அரசு மாற்றியது குறிப்பிடத்தக்கது.