Last Updated : 03 Nov, 2017 07:36 PM

 

Published : 03 Nov 2017 07:36 PM
Last Updated : 03 Nov 2017 07:36 PM

பிரிட்டன் இந்து கோயில்களுக்கான தேசியக் குழு மீது பிரிட்டன் அறக்கட்டளை ஆணையம் வழக்கு

பிரிட்டன் இந்து கோயில்களுக்கான தேசியக் குழு சர்ச்சைக்குரிய தபன் கோஷ் என்பவரை உரையாற்ற அழைத்ததால் பிரிட்டன் அறக்கட்டளைக் கண்காணிப்பு ஆணையம் இந்த அமைப்பின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

பிரிட்டனில் உள்ள இந்துக்கோயில்களுக்கான இந்த அமைப்பு மேற்கு வங்கத்தில் இந்து சம்ஹதி அமைப்பை நிறுவிய தபன் கோஷ் என்பவரை கடந்த மாதம் ‘சகிப்பின்மையை சகித்துக் கொள்வது: ஐரோப்பா, இந்தியாவில் இந்து மனித உரிமைகள் மீதான துஷ்பிரயோகம்’ தலைப்பில் கூட்டத்துக்கு தலைமையுரையாற்ற அழைத்திருந்தது. இந்தக் கருத்தரங்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் இவர் பேசிய கருத்துக்கள் தீவிரவாதக் கருத்துக்கள் என்பதாக தபன் கோஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரிட்டனில் அனைத்து அறக்கட்டளை விவகாரங்களையும் கட்டுப்படுத்தும் பிரிட்டன் அறக்கட்டளை ஆணையம், வழக்கு தொடர்ந்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

“இந்துக் கோயில்கள் தேசிய கவுன்சில் மீது பிரிட்டன் அறக்கட்டளை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தபன் கோஷ் உரை மீதான கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் அதனை மதிப்பிட வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த நிகழ்வு அறக்கட்டளை நடவடிக்கையுடன் தொடர்புடையது என்பதால்” என்று அறிக்கை ஒன்றில் பிரிட்டன் அறக்கட்டளை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிரிட்டிஷ் முஸ்லிம்கள் கூட்டமைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான பெண்கள் என்ற அமைப்பு ஆகியவை கூட்டாக கையெழுத்திட்டு இந்து கோயில்கள் தேசிய கவுன்சில் (யுகே) அறக்கட்டளை தகுதியை இழக்கச்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தக் கருத்தரங்கு பிரிட்டன் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அரங்கில் அக்டோபர் மாதம் நடந்தது. இதனை நடத்தியவர் பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. பாப் பிளாக் மேன் ஆவார். இவர் கூறும்போது, “வெறுக்கத்தக்க கருத்து எதையும் தபன் கோஷ் தெரிவிக்கவில்லை. நானும் சரி, இந்து கோயில்கள் தேசிய கவுன்சில் அமைப்பும் சரி தபன் கோஷின் முந்தைய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியும்” என்றார்.

தபன் கோஷ் தனது பிரிட்டன் பயணத்தின் போது பிரிட்டன் இந்து கழகம் நடத்திய தீபாவளி நிகழ்விலும் கலந்து கொண்டார். இதில் உள்துறைச் செயலர் ஆம்பர் ரூத் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

“உள்துறைச்செயலர் ஆம்பர் ரூத், இஸ்லாம் பற்றிய தபன் கோஷின் கருத்தை ஏற்க மறுத்தார். அவர் கோஷுடன் பேசவில்லை, அவர் உரையாற்றும்போது ஆம்பர் ரூத் அங்கு இல்லை” என்று ஆம்பர் ரூத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x