கோஸ்டா ரிகா | கால்பந்தாட்ட வீரரின் உயிரைப் பறித்த முதலை

கோஸ்டா ரிகா | கால்பந்தாட்ட வீரரின் உயிரைப் பறித்த முதலை

Published on

சான் ஜோஸ்: கோஸ்டா ரிகாவின் கானாஸ் ஆற்றில் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை தாக்கி உயிரைப் பறித்துள்ளது முதலை ஒன்று. அவரது உடலை அப்படியே கவ்வி இழுத்தும் சென்றுள்ளது அந்த முதலை.

29 வயதான ஜீசஸ் ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ் எனும் கால்பந்தாட்ட வீரர் பாலத்தின் மேலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். அந்தப் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதி என்று தெரிகிறது. இதனை உள்ளூர் காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அந்த நாட்டின் தலைநகரான சான் ஜோஸில் இருந்து சுமார் 225 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவானாகாஸ்டே மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த ஜீசஸ் ஆல்பர்டோ லோபஸ் உள்ளூர் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வந்துள்ளார். அவரது மறைவுக்கு அந்த அணி இரங்கல் தெரிவித்துள்ளது. அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஜீசஸ் ஆல்பர்டோவின் உடலை உள்ளூர் அதிகாரிகள் முதலையை துப்பாக்கியால் சுட்டு மீட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in