ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை - சர்வதேச அமைப்பு யுனிசெஃப் தகவல்

ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை - சர்வதேச அமைப்பு யுனிசெஃப் தகவல்

Published on

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர்.

64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவும் பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் அனுமதி இல்லை. அரசு வேலைகளிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பொதுவெளியில் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் நடத்தும் அழகு நிலையங்களை மூட சமீபத்தில் தலிபான் அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து யுனிசெஃப் கூறுகையில், “என்ஜிஓ மற்றும் ஐ.நா. அமைப்புகளில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான் அரசு தடை விதித்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பது அவசியம். இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெண்கள், குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவது சிக்கலாக மாறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in