

பாகிஸ்தானில் வியாழக்கிழமை சாலையோரத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலியாயினர். ஹாங்கு மாவட்டத்தில் உள்ள தோரி பண்டா எனும் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குண்டு வெடித்த பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தலிபான் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.