Published : 16 Jul 2014 11:37 AM
Last Updated : 16 Jul 2014 11:37 AM

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலி 200 ஆக அதிகரிப்பு

காசா பகுதியில், இஸ்ரேல் படையினர் நடத்திவரும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 9வது நாளாக நீடித்து வருகிறது.இதனால் காசாவில் பதற்றம் நிலை காணப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் காசாவின் தெற்கே உள்ள ராஃபாவில் கிளர்ச்சியாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த இரு தாக்குதல்களிலும் இருவர் கொல்லப்பட்டனர்.

இன்று காலை வரையிலும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடர்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 8-ஆம் தேதியிலிருந்து ரஷ்ய ராணுவத்தின் சுமார் 1000 ஏவுகணைகள் பாலஸ்தீனர்களை குறி வைத்து தாக்குத ல் நடத்தியது. காசா கிளர்ச்சிப்படையினரை குறிவைத்து 1500க்கு மேற்பட்ட முறை வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் முன்னதாக தெரிவித்தது.

பதற்றமான சூழலை தடுக்க, தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், எகிப்து அரசு சமாதான பேச்சுவார்த்தை நடத்த யோசனை கூறியது. இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று எகிப்து வலியுறுத்தியது.

எகிப்த்தின் யோசனையை, அனைத்து அரபு நாடுகளின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்த நிலையில், இஸ்ரேலும் போர்நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது.

ஆனால், இதனை ஹமாஸ் இயக்கம் நிராகரிப்பதாக நேற்று அறிவித்தது. அடுத்து சில மணி நேரங்களில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமைதி பேச்சுக்கு தற்போது வழியில்லாமல் போனதாகவும், காஸா மீது தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்.

மேலும், இந்த தாக்குதல் தொடரும் என்பதால் காஸாவில் இருக்கும் மக்கள் அனைவரும், தங்களது வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து முடிவில்லாத தாக்குதலால், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் இதுவரை 202 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x