Published : 16 Nov 2017 09:56 AM
Last Updated : 16 Nov 2017 09:56 AM

உலக மசாலா: அமிர்தமாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும்...

ரிசோனாவின் பாலைவனப் பகுதியில், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். வாசனை திரவியம், சிகரெட் புகை, புதுத் தாள், புதுத் துணி, பிளாஸ்டிக், பூக்களின் நறுமணம், ரசாயனங்கள் என்று எத்தனையோ வித ஒவ்வாமைகள் தோன்றுகின்றன. இவர்களால் மற்றவர்களைப்போல் இயல்பாக இருக்க முடிவதில்லை. காலப் போக்கில் மனநலம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் மருத்துவத்தை நாடாமல், தாங்களே சரிசெய்துகொள்ள விரும்புகிறார்கள். அதனால் மக்கள் வசிக்கும் இடங்களைத் தவிர்த்து, தனியாக வசித்து வருகிறார்கள். தங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்த்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். 1988-ம் ஆண்டு ப்ரூஸ் மெக் க்ரியரி ரசாயன ஒவ்வாமை ஏற்பட்டதால், பாலைவனத்தில் வந்து தங்கிவிட்டார். 1994-ம் ஆண்டு சூசி மோல்லோய் தனக்கு ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தார். தனியாக வசிக்க முடிவெடுத்து, இந்தப் பகுதிக்குக் குடியேறினார். இன்றுவரை தன்னுடைய காரில் தான் வசித்து வருகிறார். காகிதங்களைத் தொடும்போது கைகளுக்கு உறை மாட்டிக் கொள்கிறார். புகை பிடிக்காததால் முகமூடி அணிகிறார். இப்படி உலகத்தை விட்டு ஒதுங்கி வாழ்பவர்களுக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் நிதியுதவி செய்கிறார்கள். அதனால் இவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தங்களுக்குள் உரையாடிக்கொள்கிறார்கள். உதவி செய்துகொள்கிறார்கள். சுமார் 30 பேர் இப்படி வசித்து வருகிறார்கள்.

தள்ளி வைக்கும் ஒவ்வாமை…

ஷ்யாவைச் சேர்ந்த 21 வயது கிரில் டெரெஷினுக்கு வித்தியாசமான பாடி பில்டராக வேண்டும் என்று லட்சியம். அதனால் தன் புஜங்களை மட்டும் பெரிதாக்க நினைத்தார். எடை தூக்கும் உடற்பயிற்சியோடு புரதம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் அவர் நினைத்ததுபோல் புஜங்கள் பெரிதாகவில்லை. அதனால் சின்தால் என்ற ரசாயனத்தை, 250 மி.லி. அளவுக்கு புஜங்களில் செலுத்தினார். அவருடைய தசை ஓர் அங்குலம் வளர்ந்தது. உடனே மிகவும் மகிழ்ந்துபோனார். பிறகு லிட்டர் கணக்கில் ரசாயனத்தை செலுத்த ஆரம்பித்தார். உப்பிய புஜங்களை படம்பிடித்து, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட ஆரம்பித்தார். இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக 35 ஆயிரத்தை எட்டியது. உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ரசாயனத்தை செலுத்தி வந்தார். ஒரு நாள் பாடி பில்டிங் துறையில் இதுவரை இருக்கும் உலக சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று எண்ணினார். சக கலைஞர்கள் இவரை எச்சரித்தனர். ஆனால் தான் எந்த விதத்திலும் அசவுகரியத்தை உணரவில்லை என்று பதிலளித்தார். சமீபத்தில் புஜங்களின் நிறம் மட்டும் மாறியது. தோலில் கோடுகள் தோன்றின. கவலையடைந்த கிரில், மருத்துவரை சந்தித்தார். பொதுவாக சின்தாலை வெகு குறைவாகவும் அரிதாகவும்தான் பாடி பில்டர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இவர் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம், மாரடைப்பு ஏற்படலாம், புண்கள் தோன்றலாம்… என்று மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அமிர்தமாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x