

இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் காஸா பகுதியின் ஒரே மின் நிலையமும் தகர்க்கப்பட்டது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இருதரப்பினரும் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போரால் காஸா பகுதி யில் 3 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் வழங்கப்படுகிறது. அப் பகுதியில் ஒரே ஒரு மின் நிலையம் மட்டுமே செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வீசிய ராக்கெட் குண்டு களில் அந்த மின் நிலையம் கடுமை யாகச் சேதமடைந்து மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து காஸா பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.மின் நிலையத்தை சீரமைக்க ஓராண்டுக்கும் மேலாகும் என்று காஸா மின் துறை இன்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் உறுதி
ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியா நிரு பர்களிடம் பேசியபோது, ``இஸ்ரேல் ராணுவம் எங்களது கட்டிடங்களை தகர்த்து கற்களை உடைக்கலாம், ஆனால் எங்கள் இதயங்களை உடைக்கமுடியாது, இறுதிமூச்சு உள்ளவரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்தார்.
இஸ்மாயில் ஹனியாவின் வீடு மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் இதர தலைவர்களின் வீடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தகர்த்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிருபர்களிடம் பேசிய போது, ஹமாஸ் இயக்கத்தினர் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப் படும் என்று கூறினார்.
இருதரப்பினரும் பிடிவாத மாக உள்ளதால் இப்போதைக்கு போர்நிறுத்தம் ஏற்பட வாய்ப் பில்லை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித் துள்ளனர்.
காஸா பகுதியில் இதுவரை 1110 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 56 பேர் பலி யாகியுள்ளனர்.