Published : 15 Jul 2014 10:10 AM
Last Updated : 15 Jul 2014 10:10 AM

எருது விரட்டு திருவிழா நிறைவு

ஸ்பெயின் எருது விரட்டு திருவிழா வான சான் பெர்மின் விழாவின் இறுதி நாளான திங்கள்கிழமை நிறைவடைந்தது. ஒரு எருது, மூன்று பேரைத் துரத்தி சுவருடன் சேர்த்து குத்த முயன்றது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதில், 2 பேரின் கால்களை மாடு கள் கொம்புகளால் குத்திக் கிழித்தன. இது தவிர 5 ஸ்பெயின் நாட்டவர் உள்பட ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

இறுதி நாளின் காலையில் நடந்த எருது விரட்டில், புகழ்பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே யின் ‘தி சன் ஆல்ஸோ ரைசஸ்’ புதினத்தில் வரும் 9 நாள் திருவிழா முக்கியத்துவப்படுத்தப்பட்டது.

நடப்பாண்டு திருவிழாவில் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த 1924-ம் ஆண்டு முதல் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x