

இந்தியாவுடன் ராணுவ நிலையிலான உறவை மேம்படுத்த அமெரிக்கா ஆர்வத்துடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் அரசு முறைப் பயணமாக வருகைதரவுள்ள நிலையில் இந்த கருத்தை ராணுவ உயர் அதிகாரி தெரிவித்தார். பிசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்க படைகளின் தலைவரான அட்மிரல் சாமுவேல் லாக்லியர் கூறியதாவது:
இந்தியாவுடன் ராணுவத்துடன் ராணுவம் என்ற நிலையில் உறவை மேம்படுத்தத் தயாராக இருக்கி றோம். இந்தியாவுடன் வலுவான உறவு ஏற்பட வேண்டும் என்பதே அதிபர் பராக் ஒபாமாவின் நோக்கம். இதை இரு ஆண்டுகளுக்கு முன்பே அவர் தெரிவித்திருக்கிறார் என்றார் அவர்.
3 நாள் பயணமாக ஜென் கெர்ரி
இதனிடையே, 3 நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி புதன்கிழமை இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி உள்ளிட்டோரும் வந்துள்ளனர். புதன்கிழமை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசும் கெர்ரி, பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார்.