

இராக்கில் தற்கொலைப்படை நடத்திய கார் குண்டு தாக்குதலில் 12 இராக் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 30 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகின.
வடக்கு பாக்தாத்தில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ராணுவ வீரர்களை நோக்கி, தற்கொலைப்படையினர் வந்த கார் வெடிக்க வைக்கப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் 12 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயம் அடைந்ததாக ஜிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இராக்கில் ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கம் உள்ள அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர். இந்த போர் நாளுக்கு நாள் தீவரமடைந்து வருகிறது.
இன்று தாக்குதல் நடந்த திஜ்லா பகுதியில் இரண்டு நாட்களாகவே சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர். இதனால் இராக்கியர்கள் மோதலின் நடுவே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதுவரையில், இராக்கின் முக்கிய பெரும்பான்மையான வளங்கள் மிக்க நகரங்களை சன்னி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.